Showing posts with label j0llykids. Show all posts
Showing posts with label j0llykids. Show all posts

Sunday, 27 May 2012

மழலைப்பாடல்: நிலா நிலா ஓடிவா

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டுவா.

வட்ட வட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றிவா.

மழலைப்பாடல்: வணக்கம்

அம்மா அம்மா வணக்கம்
உங்கள் அன்பு வேண்டும் எனக்கும்

அப்பா அப்பா வணக்கம்
உங்கள் ஆசி வேண்டும் எனக்கும்

குருவே குருவே வணக்கம்
அறிவு பெருகிடச் செய்திடும் எனக்கும்

இறைவா இறைவா வணக்கம்
எம்மை இனிதே காத்திடும் என்றும்.

மழலைப்பாடல்: தோ! தோ! நாய்க்குட்டி!!

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வா நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
வீரமான நாய்க்குட்டி

வாலை வாலை ஆட்டும்
பாலைப் பாலைக் குடிக்கும்
நன்றியுள்ள நாய்க்குட்டி
நான் வளர்க்கும் நாய்க்குட்டி

எலியைப் பிடிக்க ஓடும்
புலியைப் போல பாயும்
திருடன் வந்தால் குலைக்கும்
லொள்! லொள்! லொள்!

மழலைப்பாட்டு: கொண்டுவா

காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டுவா

குருவி குருவி
கொண்டைக்குப் பூ கொண்டுவா

கிளியே கிளியே
குழந்தைக்குப் பழம் கொண்டுவா

பசுவே பசுவே
பாப்பாவுக்கு பால் கொண்டுவா.